’’குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்ல வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வியாழன், 14 மே 2020 (14:40 IST)
விழுப்புரம் மாவட்டத்தில்  முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  , இன்று விழுப்புரம் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூரி ரூ.1 லட்சம் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்துத்தார். அப்பொது  அவர் கூறியதாவது:

பெண்கள் மீது வன்முறையில் ஈடிபவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் இது ஞாயமான தீர்ப்பாக இருக்கும் . மாணவியின் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்