மதுபான கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - விஜயகாந்த்

செவ்வாய், 5 மே 2020 (17:06 IST)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  மொத்தம் 3550 பேர்  தமிழகத்தில் எகிறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர்.

சென்னையில் மட்டும் 1724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளாகி நேற்று  ஒருவர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் திங்களன்று, 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வரும்  மே மாதம் 7 ஆம் தேதி முதல்  தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்