பீஸ்ட் படத்தில் இப்படி காட்டியிருக்க கூடாது! – பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (14:25 IST)
பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்ச்சை குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்து நெல்சன் இயக்கிய படம் பீஸ்ட். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. முக்கியமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து கருத்த தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பது தவறான செயல் என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்