ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: மழை, வெள்ளம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:23 IST)
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என மழை வெள்ள மீட்பு பணிகள் குறித்து திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு நாள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளதாகவும் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் மழைக்காலங்களில் மிகவும் கஷ்டப் படுகிறார்கள் என்றும் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கோரியும் ஆட்சியாளர்கள் கவனிப்பதில்லை என்றும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சமாதிகள் மேம்பாலங்கள் நினைவிடங்கள் கட்டுவதைவிட சென்னைக்கு ஏற்படும் வெள்ளை பாதிப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அடுத்த மழை காலத்திற்குள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்