தாஜ்மஹாலை எப்போ இடிக்க போறீங்க? பாஜகவை மீண்டும் சீண்டிய பிரகாஷ்ராஜ்

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (10:54 IST)
நடிகர் பிரகாஷ்ராஜ் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மவுனமாக இருப்பதாக கூறி பாஜகவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினார். இந்த விஷயத்தில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.


 


இந்த நிலையில் மீண்டும் பாஜகவை அவர் மறைமுகமாக தனது டுவிட்டரில் சீண்டியுள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'தாஜ்மகாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று எனக்கு முன்கூட்டியே சொல்லுங்கள். அதற்கு முன்னர்  கடைசியாக ஒரு முறை எனது குழந்தைகளை அழைத்துச் சென்று தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்” என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ்ராஜின் இந்த டுவிட்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல கன்னட இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டரில், 'பிரகாஷ்ராஜ் எந்த மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று தாஜ்மஹாலை பார்க்கப்போகிறார்? என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்