சிவன் கோவில் தான் தாஜ்மஹாலாக மாறியுள்ளது. பாஜக பிரமுகர் சர்ச்சை

வியாழன், 19 அக்டோபர் 2017 (10:02 IST)
பழங்கால சிவன்கோவில் தான் தாஜ்மஹாலாக மாற்றப்பட்டுள்ளதாக பாஜக எம்பி எம்.பி., வினய் கட்டியார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது



 
 
தாஜ்மஹாலாக இருக்கும் இடத்தில் 'தேஜோ மஹால்' என்று கூறப்படும் பழங்கால சிவன் கோவில் இருந்ததாகவும் தற்போது அந்த இடத்தில் தான் தாஜ்மஹால் இருப்பதாகவும் வினய் கட்டியார் கூறியுள்ளார்.  தாஜ்மஹாலின் உள்ளே இந்துக் கடவுள்களின் சிலைகள், இருந்ததற்கான பல குறியீடுகள் இருப்பதாகவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹாலுக்குச் சென்று அதில் இருக்கும் இந்துக் குறியீடுகளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் தாஜ்மஹால் ஒரு கல்லறை என்றால், அதில் எதற்கு அத்தனை அறைகள் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ள வினய்கட்டியார், இருப்பினும் எந்தக் கட்டடத்தையும் இடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த கட்டிடத்தின் பெயரை தேஜோ மஹால் என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் நமது பழமை வாய்ந்த கட்டடங்களை ஆங்கிலேயர்கள் இடிக்கவில்லை என்றும் முகலாயர்கள் மன்னர்கள்தான் இடித்தார்கள்' என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்