மோடி என்னைவிட மிகப்பெரிய நடிகர்; பிரகாஷ்ராஜ் கண்டனம்

திங்கள், 2 அக்டோபர் 2017 (15:02 IST)
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை கொண்டாடுவதை வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி என்னைவிட மிகப்பெரிய நடிகர் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.


 

 
பெங்களூரில் கடந்த மாதம் 5ஆம் தேதி மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது குடும்ப நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-
 
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சிலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த படுகொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள்.
 
மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார். இது எனக்கு கவலை அளிக்கிறது. இதன்மூலம் மோடி என்னைவிட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்துள்ளார் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்