தெற்கு வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (07:35 IST)
தெற்கு வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி, அது புயலாக மாறியது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள், குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன.

இந்த நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இருக்கின்றன. இதன் மத்தியில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மையம் டிசம்பர் 7ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், டிசம்பர் 12ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதிகளை அடைய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்