தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம்.. அதானி நிறுவனத்திற்கு செல்கிறதா?

Siva

வியாழன், 5 டிசம்பர் 2024 (17:23 IST)
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் அனேகமாக அதானி நிறுவனத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை மாற்றும் ஒப்பந்தம் சமீபத்தில் வெளியிட்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தை அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மின்சார வாரிய வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் மற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதானி குழு நிறுவனம் தான் மிகக் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாடு அரசு இன்னும் இது குறித்த முடிவை வெளியிடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாநில அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில், அதானி எனர்ஜி நிறுவனம் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கூறிய எல்1 ஏலதாரராக உள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு கிடைத்தால், அந்நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் கட்டமைப்பை செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் பயன்பாட்டிற்கான அளவீட்டு உள்கட்டமைப்பை வழங்குதல், பராமரிப்பு செய்தல் மற்றும் இயக்குவது ஆகியவை இந்த ஒப்பந்தத்தை பெரும் நிறுவனத்தின் பணிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி நிறுவனங்கள் குறித்து திமுக கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்