வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்பட சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
இதை அடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, விளை நிலங்களும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.