ஜனவரி 13 முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (12:32 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றுள்ளனர்
 
இந்த நிலையில் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. வெளியூர் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், பக்கத்து மாநிலமான புதுவையில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன
 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் இந்த கோரிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ’பொங்கல் விடுமுறை ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து அறிவிப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யவிருப்பதாகவும் அவருடன் ஆலோசனை செய்த பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றும் கூறியுள்ளார்
 
எனவே இன்று மாலைக்குள் தமிழக அரசிடமிருந்து பொங்கல் விடுமுறை ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து விடப்படும் என்ற அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்