முந்திரி ,திராட்சை… காகிதப்பார்சல் – வருகிறது பொங்கல் சிறப்புப் பரிசு

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (17:37 IST)
நியாயவிலைக் கடைகள் மூலமாக  பொங்கல்  சிறப்பு பரிசுப் பரிசாக அரசு அளிக்கும் பொருட்களை காகித உறையில் பார்சல் செய்து கொடுக்க வேண்டுமென ஊழியர்களுக்கு உத்த்ரவு இடப்பட்டுள்ளது.

தமிழத்தில் புத்தாண்டில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கபப்ட்டுள்ளது.  உணவகங்கள், ஜவுளிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் என அனைத்து இடங்க்ளிலும் மக்கள் இதைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அதனால் அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மக்களுக்கு 2கோடி குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொங்கல் சிறப்புப் பரிசான முந்திரிப் பருப்பு, திராட்சை, வெல்லம், ஏலக்காய் ஆகியப் பொருட்களை காகித உறையில் இட்டே வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது. கண்டிப்பாக பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்க்கவேண்டும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதனால் பரிசுப் பொருட்களை காகித உறைகளில் பார்சலிடும் பணிகள் நடந்து வருவதாகவும் அதையடுத்து பரிசுப் பொருட்கள் விநியோகம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்