ஜாலியாக சுற்றும் எஸ்.வி.சேகர்; வேடிக்கை பார்க்கும் காவல்துறை

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (19:33 IST)
எ.வி.சேகருக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் இன்று வரை கைது செய்யாமல் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. 
 
பின்னர் முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அவரை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
 
எஸ்.வி.சேகரை காவல்துறையினர் கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அவரது சாலையின் தனது காரில் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மருத்துவமனையில் அவரது நண்பரை காண சென்ற புகைப்பட பதிவை வெளியிட்டுள்ளார். எ.வி.சேகரும் சாதரணமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் அவரது இதுவரை கைது செய்யவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்