குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை உடனடியாக குஷ்பு வீட்டிற்கு பாதுகாப்பு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்திருப்பது.
நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் சேரி என பதிவு செய்ததாகவும் எனவே அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குஷ்பூவுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் வருவதாக அவரது சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வீட்டிற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்