சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்: போலீசாருக்கு உத்தரவு

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:50 IST)
சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
போலீசார்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சமூக வலை பக்கத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என போலீசாருக்கு தலைமையகம் உத்தரவிட்டுள்ளது 
 
இந்த உத்தரவை அடுத்து போலீசார்கள் இன்னும் ஒரு சில நாட்களில் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் சமூக வலைதளங்களில் இருந்து உடனே விலக வேண்டுமென புதுவை அரசு பிறப்பித்துள்ள உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதே போன்ற ஒரு உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்