நாளை நடக்க இருந்த CA அடிப்படை தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:45 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஏற்கனவே சிஏ அடிப்படை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் நாளை நடைபெற இருந்த சிஏ அடிப்படை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை நடக்க இருந்த அந்த தேர்வு அதே தேர்வு மையத்தில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது  இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தேர்வாளர்கள் சிஏ தேர்வு இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்