முதுகை படிகட்டாக மாற்றி கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவலர்கள் - ஆணையர் பாராட்டு

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (13:02 IST)
கர்ப்பிணிப்பெண் ரயிலில் இருந்து கீழே இறங்க முதுகை படிகட்டாக மாற்றி அவர் கீழே இறங்க உதவிய காவலர்களை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டினார்.
 
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று,  சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது.  இதனையடுத்து  பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில் கர்ப்பிணி பெண் அமுதா, கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்தார்.
 
இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர் படிக்கட்டு போல குனிந்து நின்றனர்.
 
கர்ப்பிணி பெண் அமுதா, அவர்களின் முதுகின் மீது கால் வைத்து கீழே இறங்கினார். காவலர்களின் மனித நேயத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், அவர்களின் மனிதத்தையும் கடமை உணர்ச்சியையும் பாராட்டும் விதமாக அந்த இரு காவலர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில் கூட ஏ.கே விஸ்வநாதன்,  காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞரை அவரது வீட்டிற்கே சென்று ஆறுதல் தெரிவித்தார். இதனால் ஆணையரின் மீதான மதிப்பு மக்களிடையே கூடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்