தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு: தாம்பரத்தில் பரபரப்பு!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (07:56 IST)
போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தாம்பரம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு ரவுடியை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
தாம்பரம் அருகே உள்ள பூந்தண்டலம் என்ற பகுதியில் ரவுடி சச்சின் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சச்சினை பிடிக்க காவல்துறையினர் அந்த பகுதியில் சுற்றி வளைத்த போது ரவுடி சச்சின், காவலர் பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றதாக தெரிகிறது 
இதனையடுத்து ரவுடி சச்சினை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.  இதனால் சச்சினின் காலில் துப்பாக்கி குண்டு துளைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
ரவுடி சச்சின் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ள நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்