மோசடிக்காரர்களிடம் மோசடி செய்த காவலர்கள்! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (10:25 IST)
சென்னையில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றவர்களிடம் காவலர்கள் பணத்தை திருடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் ரெம்டெசிவிர் நேரடியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாவதால் ரெம்டெசிவிரை தேவையான மருத்துவமனைகளுக்கே நேரடியாக அனுப்பப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் ரெம்டெசிவிரை கள்ள சந்தையில் விற்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவ்வாறாக சென்னையில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்க முயன்றதாக கீழ்பாக்கம் மருத்துவமனை ஊழியர் முதற்கொண்டு 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்களது ஏடிஎம் கார்டை வாங்கி 2 காவலர்கள் 1 லட்சம் வரை பணத்தை அவர்களிடம் இருந்து திருடியது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து எஸ்.ஐ மற்றும் ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்