ஜனவரி 31க்குள்ள அதை அறிவிக்காவிட்டால்..? – அதிமுகவுக்கு ராமதாஸ் கெடு!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (14:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடனான கூட்டணிக்கு பாமக நிபந்தனை விதித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் பாமக வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க கோரி அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் அதிமுக – பாமக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி குறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு குறித்து அதிமுக அரசு ஜனவரி 30க்குள் அறிவிக்கவில்லை எனில் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்