எதற்கும் துணிந்தவனுக்கு எதிராக பாமக போராட்டம்! – திரையரங்கில் காட்சிகள் ரத்து!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (11:42 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இன்று வெளியான நிலையில் விழுப்புரத்தில் பாமகவினர் போராட்டத்தால் காட்சிகள் ரத்தாகியுள்ளன.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில் இன்று சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சரவணா திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் படத்தை திரையிட கூடாது என பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையரங்கு எதற்கும் துணிந்தவன் படக்காட்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்