போரை நிறுத்துங்க.. போர்டு பிடித்த சூர்யா ரசிகர்கள்! – தியேட்டரில் சுவாரஸ்யம்!

வியாழன், 10 மார்ச் 2022 (09:51 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் உக்ரைன் போர் குறித்து சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் போர்டு பிடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

சூர்யா நடித்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது உக்ரைன் போர் குறித்து பேசிய சூர்யா சில நிமிடங்கள் போரில் சிக்கியுள்ள மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகளில் சூர்யா ரசிகர்கள் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தி “ஸ்டாப் வார்” என்னும் முழக்கத்தை முன்னெடுத்து கையில் பதாதைகள், போஸ்டர்களை ஏந்தினர். இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்