பாமக - தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை.! எதிர்பார்ப்புகள் என்ன? கேட்கும் அதிமுக..!!

Senthil Velan
புதன், 31 ஜனவரி 2024 (13:55 IST)
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என கூறப்படுகிறது.
 
தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
 
வருகிற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரானவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என தெரிகிறது. இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, எந்த கட்சியை கூட்டணிக்கு அழைப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாமக மற்றும் தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தேமுதிக மற்றும் பாமகவின் எதிர்பார்ப்புகள் குறித்து அதிமுக தொகுதி பங்கிட்டு குழுவினர் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை பாமக நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேமுதிகவின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. 

ALSO READ: அடையாள அட்டை காணவில்லை..! தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புகார்..!!
 
தேமுதிக பாமக உடன் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  யார் யாருடன் கூட்டணி சேருவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என தெரிகிறது..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்