சென்னை வருகிறாரா பிரதமர் மோடி? முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பா?

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (11:03 IST)
பிரதமர் மோடி வரம் 27ஆம் தேதி சென்னை வர இருப்பதாகவும் அப்போது அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தின் புதிதாக ஒருங்கிணைப்பு நிலையம் கட்டப்பட்டது என்பதும் இந்த ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி சென்னை வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது இருவரும் சந்திக்கும் நிகழ்வு நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
பிரதமர் மோடி சென்னை வர இருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்