பிரதமரிடம் நீட் தேர்வு குறித்து பேசியது என்ன? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!
செவ்வாய், 14 மார்ச் 2023 (13:17 IST)
பிரதமரிடம் நீட் தேர்வு குறித்து பேசியது என்ன என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இன்று அனிதா அரங்கம் திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது அவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்னால் டெல்லி சென்றபோது நான் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது அவரிடம் நான் வைத்த முதல் கோரிக்கை நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
அதற்கு பிரதமர் என்னிடம் சில விளக்கங்களை அளித்தார் என்றும் ஆனாலும் நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் பல ஆண்டு கோரிக்கையாக இருக்கும் என்றும் நீட் தேர்வு ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் பிரதமரிடம் நான் தெரிவித்தேன் என்று கூறினார்.
இந்த அரங்கத்திற்கு அனிதா என்று பெயர் வைத்ததற்கு காரணமே இந்த அரங்கத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது நீட் தேர்வு ரத்து என்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும் என்பதற்காக தான் என்று அவர் கூறினார்.
நீட் தேர்வு ரத்து என்பது பெரிய ரகசியம் ஒன்றுமில்லை நீட் தேர்வுக்கு எதிராக பயப்படாமல் குரல் கொடுப்பதுதான் அந்த ரகசியம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.