நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரைபேரணி: டெல்லியில் பரபரப்பு

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (10:57 IST)
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை 16 கட்சிகளின் தலைவர்கள் பேரணி செல்ல இருப்பதாக கூறப்படுவதை அடுத்து டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டி  வருவதாகவும் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. 
 
இந்த நிலையில் இன்று 16 கட்சிகளின் தலைவர்கள் கூடிய நிலையில் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இன்றே இந்த பேரணி நடக்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பேரணியில் திமுக எம்பிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்