கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிலையை திறந்து வைக்க நேற்று தமிழகம் வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என கூறப்படுகிறது.
ஏற்கனவே தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி நேற்று நேரிலும் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முதல்வராக பொறுப்பேற்ற பின், பிரதமரை தமிழக முதல்வர் சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் இந்த முதல் சந்திப்பில் அரசியல் குறித்து இருவரும் எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.