நோயாளியை ஏற்றிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (19:14 IST)
தமிழ்நாட்டில் சாதாரண மக்களின் அவசரகால மருத்துவத்துக்கு  அரசால் வழங்கப்பட்டது 108 ஆம்புலன்ஸ் சேவையாகும்.  இன்று கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி அருகில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி அருகில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாகச்சென்று கொண்டிருந்தது.
 
பின்னர் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆம்புலன்ஸில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸில் டிரைவர்  உள்ளே இருந்தவர்களை எச்சரிக்கை அதிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி, அவருடன் வந்தவர்கள் மற்றும் 2 நர்ஸ்கள் ஆகியோர் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸில் எரிந்து கொண்டிருந்த தீயை நீண்டநேரம் கழித்து போராடி அணைத்தனர்.தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்