டூரீஸ்ட் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Webdunia
புதன், 13 மே 2020 (21:33 IST)
கரூர் மாவட்ட ஆநிலையப்பர் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் அதில் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுனர்கள் உள்ளனர் இதில் கரூர் மாவட்டத்தில் சுமார் 800 ஓட்டுனர்கள் உள்ள நிலையில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு மட்டும் நலவாரியத்தில் பதிவு செய்து அதன் பயனை பெற்று வரும் நிலையில் எங்களது மாவட்டத்தில் வாடகை கார் ஓட்டுநர் யாவருக்கும் அரசிடமிருந்து மற்றபிற அமைப்புகளிடம் இருந்து எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் மத்திய மாநில அரசுகள் அறிவித்த பொது ஊரடங்கு அறிவிப்பினால் கடந்த 50 நாட்களாக வாடகை வாகனங்கள் இயங்காமல் இருக்கும் நிலையில் கரூர் மாவட்ட வாடகை கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களின் குடும்பத்தினரும் சொல்ல முடியாத வேதனைகளும் துயரங்களையும் அடைந்து வருகின்றனர்.

அவர்களுக்கு வேறு எந்தவித வருமானமும் இல்லாததால் ஒருவேளை உணவுக்கே மிகவும் சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில் வாகனங்களை இயக்கும்போது சாலை வரி இன்சூரன்ஸ் கடன் தவணை வாகன பராமரிப்பு மற்றும் இன்னும் பிற செலவுகளால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கடந்த 50 நாட்களாக எங்களது வாகனம் இயங்காமலும், இந்த சூழ்நிலையில் எப்பொழு மாறும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையிலும் வருமானம் இழந்த நிலையில் இயங்காத தங்களது வாகனத்திற்கு சாலை வரி இன்சூரன்ஸ் கடன் தவனை தொகை அதற்கு அபராத வட்டி வாகன பராமரிப்பு ஆகியவற்றை சாமானியர்களாகிய எங்களால் எப்படி சமாளிக்க இயலும்.

இது தவிர வாகனங்களுக்கு காப்பீடு செய்து உள்ளதால் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் விதத்தில் மத்திய மாநில அரசு கெரோனோ வைரஸ் பேரிடராக அறிவித்து உள்ளபடியால் உரிய பேரிடர் இழப்பாக எங்களுக்குப் பெற்றுத் தரவும் ஓட்டுநர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் இந்த சூழ்நிலை மாறும் வரை எங்களது இயங்காத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் விலக்கு அளித்து எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டுமென்றும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகிய கரூர் மாவட்டத்தைச் சார்ந்த எங்களுக்கு நிவாரணமாக ஒரு தொகை வழங்க வேண்டும் என்று அப்போது செய்தியாளர்களிடம் கரூர் மாவட்ட ஆனிலையப்பர் டூரிஸ்ட்வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரகு தெரிவித்தார்.
  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்