பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (07:07 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன் காரணமாக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது ஆனால் கவர்னர் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்ட காரணத்தினால் இன்னும் அதற்கான முடிவு தெரியாமல் உள்ளது
 
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு சமீபத்தில் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது அந்த. பரோல் காலம் தற்போது முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பேரறிவாளன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்
 
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை வகுத்து வரும் 7 பேர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்