சர்வதேச விமானங்களுக்கு மேலும் ஒரு மாதம் தடை: மத்திய அரசு

வெள்ளி, 28 மே 2021 (15:22 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச விமானங்கள் கடந்த சில வாரங்களாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச விமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது
 
மே 31-ஆம் தேதி வரை இந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு சர்வதேச விமான தடையை மத்திய அரசு நீடித்து உள்ளது இதனை அடுத்து ஜூன் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது
 
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ள விமானங்கள் மட்டும் இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது உள்நாட்டு விமானங்கள் மற்றும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில சர்வதேச விமானங்கள் இயங்கினாலும் அதில் போதுமான பயணிகள் இல்லை என்பதும் இதனால் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்