தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள்...

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (19:02 IST)
தமிழக அரசியல் நிலத்தில் தன் அறிவுஏரை உழுது, அதில் நாகரிகப் பண்பு எனும் பயிரை   விதைக்கக் காரணமானவர் அண்ணாத்துரை. தமிழர்களின் நெடுங்குரலாக அன்று இந்தியா நாடாளுமன்றம் வரையிலும் உரக்ககுரல் கொடுத்து ; இலக்கியத்திலும், நாடகத்திலும், நாத்திகத்திலும்,  சினிமாத்துறையிலும், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும், அரசியலிலும் வெற்றிநாயகனாக விடிவெள்ளியாக மக்களின் இருளைப் போக்கவந்த திராவிட சூரியனாகவே  மக்கள் மனங்களில் அன்பு பொங்க நிரம்பி வழிகிறார் பேரறிஞர் அண்ணாத்துறை.
ஒரு சாமானியன் அரசியல் கட்சி தொடங்கி, மக்களுடன் நெருங்கிப் பழகி, அறிவில் சிறந்தோங்கி, பலகோடிப்பேரை தனக்கு அன்பர்களாக்கிச் சரித்திரத்தில் தன்னிகரற்ற சரிந்திரம் படைத்துள்ள  பெருமைக் குரியவர் அண்ணாத்துறை தான்.
 
திமுக  மற்றும் அதிமுக கட்சியின் மூலம் அண்ணாதான். திமுகவை அறிஞர் அண்ணா துவக்கி சீறும் சிறப்புமாக நடத்தி, தமிழகத்தில், ஆட்ச்சியைப் பிடித்தார். 
 
அவரது மறைவுக்குப் பின்னர், அன்றைய முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அன்றைய சினிமா சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர்  அதிமுக கட்சியை தொடங்கினார்.  அந்தக் கட்சியில் பெயர் கூட, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அண்ணாவின் பெயரைத் தாங்கியே வந்தது. அன்று தமிழகத்தில்  அண்ணா ஊன்றிய அரசியல் அஸ்திவாரம், இன்றுவரை வேறு கட்சிகளுக்கு எந்த வாய்ப்புகளுக்கும் இடமளிக்காமல் கருத்துவேறுபாடு - பகைமை - வெறுப்புகள் இருந்தாலும் கூட திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக, வேறு கட்சிகள் தலையெடுக்க முடியாத நிலைமை இன்று தமிழகத்தில் உள்ளது. அதுமட்டுமா அண்ணாவின் பெயரை எடுத்துவிட்டு தமிழகத்தில் அரசியல்  செய்ய முடியாது என்று மக்களின் நினைவுகளில் சொந்த  அண்ணாவாகவே நிறைந்துவிட்டார் அண்ணா
இது அண்ணா போட்ட அரசியல் சாணகியத்தனம். அவரது பேராற்றிலின் வடிவமாக இன்று கெம்பீரமாக நிற்கின்ற திராவிட கட்சிகளுக்கு மூலம் அண்ணாதான். அத்தகைய பேரறிஞர் நாடாளுமன்றத்திலும் தன் அன்னநடை ஆங்கிலச் சொல்லாற்றலை பிரயோகித்து முன்னாள் பிரதமர் நேருவை பிரமிக்கச் செய்துள்ளார். நாட்டிலுள்ள முக்கியத்தலைவர்களின் ஆகச் சிறந்த முன்மாதிரி மற்றும் அரசியலில் ஆளுமைவடிவாக திகழ்ந்த - திகழ்கின்ற அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 முன்னிட்டு நாமும் அவரது அருஞ்செயல்கள், பண்பு, தமிழ்பற்று மற்றும் அவரது  எளிமையை போற்றிக் கடைபிடிப்போம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்