ஏமாற்றிய பொதுமக்கள்: பஸ் கலெக்‌ஷன் சுமார் தான்...!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (12:48 IST)
தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கினாலும், பயணிகள் வரத்து குறைவாகவே இருந்தது.
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் ஓடாத நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.
 
5 ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அவற்றில் ஒன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்பதாகும்.
 
இந்நிலையில் தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கினாலும், பயணிகள் வரத்து குறைவாகவே இருந்தது.  வழக்கமாக 12 லட்சம் முதல் 13 லட்சம் பேர் பயணிக்கும் பேருந்துகளில் நேற்று 1,58,000 பேர் மட்டுமே பயணித்துள்ளனர் என எண்ணிக்கை வெளியாகியுள்ளது. 
 
அதாவது அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் பயணத்திற்கான தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை என தெரிகிறது. அதோடு முக்கிய நகரமாக சென்னை முடக்கப்பட்டுள்ளதாலும் இந்த நிலை இருக்கலாம் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்