பஸ்களில் போகணும்னா இந்த ரூல்ஸ் கட்டாயம்! – தமிழக அரசு அதிரடி!

திங்கள், 1 ஜூன் 2020 (08:16 IST)
இன்று முதல் தமிழகத்தின் 6 மண்டலங்களில் பேருந்து வசதி தொடங்கப்படும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு விளக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இரண்டு மாத காலத்திற்கு பிறகு இன்று பேருந்துகள் செயல்பட தொடங்குகின்றன. இந்நிலையில் பேருந்தில் நடத்துனர்கள், மற்றும் பயணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். பான், குட்கா, பொருட்களை பொது வெளியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகர பேருந்துகளில் டிக்கெட், பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகள் மாதந்திர பாஸ்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பாஸ் அளிக்கும் அலுவலகங்களில் நேரடி பணபரிமாற்றத்தை தவிர்க்க டிஜிட்டல் பணபருவர்த்தனை செய்ய ஏதுவாக கியூஆர் கோடுகளை அளிக்க வேண்டும்.

பயணிகள் அனைவரும் பின் வாசல் வழியாக ஏற வேண்டும், முன்வாசல் வழியாக இறங்க வேண்டும். இடைவெளி விட்டு எந்தெந்த சீட்டுகளில் பயணிகள் அமர வேண்டும் என எண்கள் இட வேண்டும்,

பணிக்கு வரும் ஓட்டுனர், நடத்துனரின் உடல் வெப்பநிலைகளை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

பயணிகளும், ஊழியர்களும் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பேருந்து நிலையங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டதாக இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்