ஜீவ சமாஜி அடையப்போவதாகக் கூறி உண்டியல் வசூல்... இருளப்பசாமி மீது வழக்கு !...ஏமாற்றம் அடைந்த மக்கள்

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (15:29 IST)
சிவகங்கை மாவட்டம் பாசங்கரையில், ஜீவசமாதி அடையப் போவதாக கூறி, பொதுமக்களிடம் உண்டியல் வசூலித்ததாக, இருளப்பன், அவரது மகன் உள்பட 7 பேர் மீது காவல்நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம், பாசங்கரை என்ற கிராமத்தில் வசித்துவருபவர் இருளன் (80). இவர்,  இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குறி, ஜோஷியம், அருள்வாக்குகள் சொல்லுபவராக இருந்துவருகிறார். அதனால் இந்த ஊரில் அவரை எல்லோருக்கும் தெரியும்.
 
இந்த நிலையில், கடந்த செப்., 12 நள்ளிரவு முதல் செப்., 13 தேதி அதிகாலை வரைக்குள் தான் ஜீவ சமாதி அடையப் போவதாக இருளப்பசாமி எல்லோரிடத்திலும் தெரிவித்துள்ளார். அதனால் அவரது ஜீவசமாதியை பார்ப்பதற்க்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, மக்கள் திரளாக பாசங்கரைக்கு வந்தனர். இதற்காக 10 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்தில் ஒரு குழி தோண்டி, ஜீவ சமாதிக்காக தயார் நிலையில் வைத்திருந்தனர். இதனையொட்டி, போலீஸார் இருளப்ப சாமி  மற்றும் அப்பகுதியை கண்கணித்துவந்தனர். 
 
இந்நிலையில் 13 ஆம் தேதி, நள்ளிரவு, மாவட்ட ஆட்சியர், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். அதிகாலை விடிந்த பிறகும் கூட இருளப்பசாமியார் ஜீவ சமாதி அடையவில்லை. அதன்பின்னர், தான் இன்னொருநாள் ஜீவ சமாதி அடையவுள்ளதாக இருள்ளப்ப சாமி தெரிவித்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
அப்போது, இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமான மக்களை ஏமாற்றி உண்டியல் வசூலித்ததாக இருளப்பா சாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்