சிவகங்கை மாவட்டம் அருகேயுள்ள ராமலிங்கபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கைலாஷ் ( 37). இவர் அப்பகுதியிலெயே ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி லீலாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா(13) மற்றும் சுகிர்தா(7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா ஆழ்வார்குறிச்சியில் உள்ள பள்ளியிலும், சுகிர்தா பெற்றோருடன் தங்கி சிவகங்கையில் உள்ள பள்ளியிலும் படித்து வந்துள்ளனர்.