பொதுமக்கள் முகக்கவசம் அணியுங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் வலியுறுத்தல்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:53 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்புளூயன்சா  உள்பட ஒரு சில நோய்கள் பரவி வருவதை அடுத்து மீண்டும் மாஸ்க் அணிய பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுகந்த்சிங் பேடி அவர்கள் இன்புளூயன்சா உள்பட  தொற்று குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பருவ காலத்தில் பரவும் நோய்களை தடுக்க மருத்துவ முகங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இன்புளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி  அனைத்து பொதுமக்களும் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் காய்ச்சல் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.  

மேலும் கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்