கேரளாவை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு.. 37 பேர் சிகிச்சையில் என தகவல்..!

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (11:09 IST)
சிங்கப்பூர் உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

கேரளாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது.
 
தமிழகத்தில் நேற்று வரை முப்பது பேர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் தற்போது 37 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதையடுத்து பொதுமக்கள் மாஸ் அணிதல் உள்பட எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்