பட்டினம்பாக்கம் போராட்டத்தில் அடிபணிந்த தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (12:44 IST)
பட்டினம்பாக்கம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்களின் தொடர்போராட்டத்தின் விளைவாக, அந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுகிறது.


 

 
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பெருந்து நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அண்மையில் ஏற்பட்ட நந்தினி மரணத்திற்கு மதுக்கடையும் ஒரு காரணாமாக இருந்ததால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
 
அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக  தற்போது பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
 
இதுகுறித்து பட்டினப்பாக்கம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
 
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அரசின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. டாஸ்மாக் கடை அடைத்திருந்த 7 நாட்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக நாங்கள் இருந்தோம். இதேபோன்று எப்போதும் இருந்தால் பட்டினம்பாக்கம் எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கும், என்றனர்.
 
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்