பகுதி நேர பொறியியல் படிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (11:53 IST)
பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு அரசு கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நான்காண்டு பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
 
https:www.ptbe-tnea.com/ என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கலந்தாய்வு ஆன்லைனில் மூலம் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே பகுதி நேர படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்