பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: இணையதள முகவரி அறிவிப்பு..!
திங்கள், 26 ஜூன் 2023 (07:32 IST)
பொறியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை இன்று அமைச்சர் பொன்முடி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்றது என்பதும் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பொறியியல் படிப்பை உறுதி செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2023 - 24 ஆம் ஆண்டு பொறியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது
www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் இந்த தரவரிசை பட்டியலை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.