இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர் என்றும், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது என்ரும் கூறினார்,
பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கட்ஆஃப் மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் முதலில் கணித பாடத்தின் மதிப்பெண் இரண்டாவதாக இயற்பியல் மதிப்பெண், மூன்றாவதாக விருப்பப் பாடத்தின் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால் பிளஸ் 2 மொத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.