மோடி, அமித்ஷாவை ஓபிஎஸ் விரைவில் சந்திப்பார்: வைத்திலிங்கம்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (17:52 IST)
பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விரைவில் ஓ பன்னீர்செல்வம் சந்திப்பார் என அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக உடன் நாங்கள் இருக்கிறோம் என்றும் அந்த அடிப்படையில் எங்கள் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உண்டு என்றும் வைத்திலிங்கம் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
 
மேலும் அதிமுக பிரச்சனையில் தலையிட்டு அனைவரையும் ஒன்றுபடுத்த பாஜக முயற்சி செய்கிறது என்றும் அதற்கான உரிமையும் அந்த கட்சிக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் விரைவில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஓபிஎஸ் சந்திப்பார் என்றும் இந்த சந்திப்புக்குப் பின்னர் பல திருப்பங்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்