தேவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (13:46 IST)
தேவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின் தேவர் சிலைக்கு ருத்ராட்ச மாலையும் அணிவித்தார். 
 
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்றும் எனவே அந்த அடிப்படையில் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு 10.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தை வழங்கினேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் அவர்களிடம் வெள்ளி கவசத்தை ஓ பன்னீர்செல்வம் வழங்கியதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன
 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் நாம் தமிழர் கட்சியின் சீமான், தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்