அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஒபிஎஸ் தலைமையிலான ஒரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், இருவரையும் கட்சியின் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.