தேவர் தங்கக் கவசம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!
புதன், 26 அக்டோபர் 2022 (18:25 IST)
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை தங்களிடம் வழங்க வேண்டுமென ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் கோரிக்கை வைத்த நிலையில் இருவரது கோரிக்கையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
இந்த தீர்ப்பில் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல் வம் தரப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து தங்க கவசத்தை பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது