டீசல் விலையை மட்டுமாவது குறைக்க வேண்டும்! – முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:41 IST)
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் டீசல் விலையை மட்டுமாவது குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் விலை 103 ரூபாயையும், டீசல் 100 ரூபாயையும் எட்டியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விரிவான அறிக்கை எழுதியுள்ள எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றிற்கு டீசலே எரிபொருளாக உள்ள நிலையில், டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசு டீசல் விலையில் குறிப்பிட்ட அளவு விலை குறைத்தாலும் தொடர்ந்து விலை ஏறி வ்ருவதால் மேலும் விலை குறைக்கவும், மத்திய அரசிடம் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து பேசவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்