ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த ஈபிஎஸ்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (11:58 IST)
ஒருங்கிணைந்து செயல்படுவோம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை எடப்பாடிபழனிசாமி நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் எதுவும் செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டு உள்ளனர்.
 
இந்த நிலையில் அதிமுகவில் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களையும் இணைத்துக் கொள்வோம் என்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்