முதலமைச்சர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் நாடகமாடுவதாக எடப்பாட பழனிச்சாமி அணியை சேர்ந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நேற்று சசிகலா அணி சார்பாக இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 68976 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை அதிமுக இணைய வேண்டுமானால் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் தரவேண்டும் அப்போதுதான் இணைய முடியும் என்று தெரிவித்துள்ளார். எனவே இது உண்மையான நிபந்தனை கிடையாது. ஓபிஎஸ் முதல்வர் பதவிக்காக நாடகமாடுகிறார் என்றார் அமைச்சர் சண்முகம்.