காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு....மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (13:59 IST)
பெரம்பலூரில் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால்  மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் கொல்லம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஆர்த்தி( 19 வயது). இவர் சென்னை  அண்ணாசாலையில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், மாதவரம் பகுதியை அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்( 24) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இனந்த நிலையில்,  நேற்று முன்தினம் இரவும்  ஆகாஷ் குடிபோதையில் ஆர்த்தி வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.

இதைப் பார்த்த அருகில் வசிப்போர் போலீஸில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் ஆகாஷை கைது செய்து, அவரது பெற்றோருக்கு தகவல் கூறினர்.

அதன்பின்னர், ஆகாஷ் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மன்ப்னிப்பு கேட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால், வீட்டில் தகராறு ஏற்பட்ட நிலையில், மனனமுடைய ஆர்த்தி வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று  அவர்  நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்